புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.
2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.
அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள்.
அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.
பல கமர்ஷியல் படங்களுக்கு முன்னணி நாயகியாக ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்ட சினேகா தான். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி படத்திலேயே முதலில் சினேகாதான் பேசப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆன சினேகா, தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
பொதுவாக நடிகைகள் திருமணதிற்கு பிறகு உடல் எடை கூட குண்டாகி விடுவார்கள். ஆனால், சினேகா திருமணத்திற்கு பின்னும் தன்னுடைய பிசிக்கை அப்படியே மெய்டேய்ன் செய்கிறார்.
அதற்க்கு முக்கிய காரணம் அவருடைய அன்றாட உடற்பயிர்சி தான். தன்னுடைய ரசிகர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்கபடுத்தும் வண்ணம் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவு செய்வார்.