நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் தமிழ் திரையுலகில் மெகாஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றுக்கொடுத்தது.
மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக அனைவருக்கும் தனது முதல் காதலியையும், பள்ளி பருவ காதலியையும், பள்ளியில் பயின்ற வாழ்க்கையும் இந்த திரைப்படம் நினைவு படுத்தி விட்டது.
இந்த திரைப்படத்தில் குட்டி திரிஷாவாக நடித்தவர்தான் நடிகை கௌரி கிஷன்.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது அதுமட்டுமில்லாமல் தற்போது மலையாளத்தில் இரண்டிற்கு மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படவாய்ப்புகள் குறைந்து கொண்டு போகும் நிலைமையில் பிரபல நடிகைகள் கையாள்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சத்தமாக சிரித்தபடி போஸ் கொடுத்து நான் சிரிக்கும் சத்தம் உங்களுக்கு கேக்குதா..? என கேட்டுள்ளார் அம்மணி.