Friday , April 23 2021
Breaking News
Home / Entertainment / திருமணமாகி 6வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்த ஷ்ரேயா கோஷாலுக்கு நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

திருமணமாகி 6வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்த ஷ்ரேயா கோஷாலுக்கு நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக திகழ்ந்து வரும் ஸ்ரேயா கோஷல் திருமணமாகி 6வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்த நிலையில் தற்போது முதன் முறையாக கர்ப்பம் தெரித்துள்ளார்.

இந்த நல்ல தகவலை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவு செய்து தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல். இதனை பார்த்த பலர் பிரபலம் மற்றும் ரசிகர்கள் அனைவருமே வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் டி இமான் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்றோர் தாங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு பாடலாவது பாட வைத்து விடுவார்கள்.

ஸ்ரேயா கோஷல்  அவர்களுக்கு தற்போது 36 வயது ஆனாலும் இன்னும் பார்ப்பதற்கு இளம் பெண் போல் தோற்றமளிக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணமானதே நிறைய பேருக்கு தெரியாது. ஸ்ரேயா கோஷல் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 6 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையில் இருந்த ஷ்ரேயா கோஷால் தற்போது முதல் முறையாக கருவுற்றிருக்கும் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கேள்விபட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அவரின் புகைப்படம்..!

Check Also

“உங்களுக்கு வயசே ஆகல…” – புன்னகையரசி சினேகா

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை தான் சினேகா. இவர் முதன்முதலில் என்னவலே என்ற திரைப்படத்தின் மூலம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *