Thursday , May 6 2021
Breaking News
Home / Health / தயிரோடு மறந்துகூட இந்த 6 உணவையும் சேர்த்து சாப்பிடாதீங்க…. இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்!

தயிரோடு மறந்துகூட இந்த 6 உணவையும் சேர்த்து சாப்பிடாதீங்க…. இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்!

தயிர் இயற்கையிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. குறிப்பாக கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன.

தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும். இருப்பினும் இதனை ஒரு குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக கூறப்படுகினறது.

அந்தவகையில் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாதா உணவு பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெங்காயம், நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கவல்லது. தயிர் வெங்காயம் போன்ற தயிரும் வெங்காயம் கலந்த கலவையை நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பட்சத்தில், அது, தோல் அலர்ஜியை ஏற்படுத்தவல்ல உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.

மாம்பழம், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கவல்லது ஆகும். தயிர் உடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.

தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்பிசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது.

Check Also

உடல் சூட்டை எளிதாக குறைக்க இதை சாப்பிடுங்கள் போதும்!

உடல் சூடாகும் பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். உடல் சூட்டை தணிக்க சில எளிய உணவுகளை சாப்பிட்டால் போதும்., சூடு குறைந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *