Thursday , May 6 2021
Breaking News
Home / News / கேரளா வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெண்! யார் இவர் தெரியுமா? குவியும் வாழ்த்துகள்

கேரளா வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெண்! யார் இவர் தெரியுமா? குவியும் வாழ்த்துகள்

கேரளா வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் கே.கே.ஷைலஜா.

கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது இதனால் மீண்டும் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி சார்பில் போட்டியிட்ட KK Shailaja தான் போட்டியிட்ட Kannur மாவட்டத்தில் 60000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

64 வயது மதிக்கத்தக்க KK Shailaja கேரளா மாநிலத்தின் சுகாதார மந்திரி ஆவர். இவர் கொரோனா மற்றும் நிபோலா போன்ற சமயத்தில் திறம்பட செயல்பட்டு, நோய் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த உதவினார்.

அதுவே இந்த தேர்தலில் இவர் இந்த அளவிற்கு அதிக வாக்குகள் பெற காரணம் எனவும், அதுமட்டுமின்றி கேரளா தேர்தல் வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெண் இவர் தான் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் கூறி வருகின்றன.

Check Also

இந்தியாவில் இருந்து திரும்பினால் சிறை… எழுந்த கடும் விமர்சனம்

அவுஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முயற்சித்தால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற உத்தரவுக்கு பிரதமர் ஸ்காட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *