Tuesday , June 22 2021
Breaking News
Home / News / வீட்டில் சுருண்டு விழுந்த தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்

வீட்டில் சுருண்டு விழுந்த தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்

பிரபல திரைப்பட நடிகர் மேலா ரகு தனது 60வது வயதில் காலமானார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் ரகு. இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அபூர்வ சகோதர்கள் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ரகு நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதி வீட்டில் சுருண்டு விழுந்த ரகு பின்னர் கேரளாவின் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Check Also

கனடாவில் கொரோனாவை தொடர்ந்து பரவும் மர்மமான நோய்! பீதியில் மக்கள்.

கொரோனா வைரஸ் பரவல் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கனடாவில் மர்மான மூளை நோய் ஒன்று பரவி வருகிறது. உலகையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *